கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

“நிலாவரை நீரூற்று

நிலாவரை நீரூற்று
நிலாவரை யாழ் நீரூற்று கேணி
நெடும்பாலை மண்ணில் அதை பேணி
குடாநாடு முழுமைக்கும் வாய்க்கால்
கொண்டு சென்றால் பசுமை தரும் சோக்காய்
**புத்தூரால் யாழ்ப்பாணம் போகும்
பொழுதெல்லாம் அதை நோக்கும் யாரும்
இப்பாரின் அதிசயத்தை பார்த்து
எப்படியாம் இது என்பார் வியந்து
**நெடும் தொலைவில் வானில் நிதம் ஒளிர்ந்து
நிற்கும் நிலா போல் ஆழ புதைந்து
இருக்கின்ற காரணத்தை குறித்து
இட்டாரோ நிலாவரை பேர் இதற்கு
**பருவமழை நீர் மண்ணில் ஓடி
படிந்திருக்கும் சுண்ணக்கல் நாடி
வரும் ஊற்றாய் கோடை தோறும் பீறி
வற்றாத கிணறு என்ற பெயரில்
**இடி விழுந்த பள்ளம் என்பாள் பாட்டி
இராவணணார் உதைத்ததென்பாள் பூட்டி
இடையறுந்த காதலர்கள் விழுந்து
இறந்ததனால் பேய்கள் உண்டாம் நிறைந்து
**பாணன் யாழ் மீட்டி பெற்ற பரிசு
பச்சை வற்றி பாழ் நிலமாய் விரிவு
வீணாகும் மழை நீரை தடுத்து
விட குளத்தில் கொட்டும் வளம் நிறைந்து

Nada Mohan
Author: Nada Mohan