நிழாலாடுதே நினைவாயிரம்..

வசந்தா ஜெகதீசன்
வாழ்வின் ஓடம் வரலாற்றுப் பாடம்
நகர்ந்தே சென்றிடும் நலிவைச் சுமந்திடும்
விரைந்தே சென்று வெற்றியைத் தேடிடும்
வீழ்ந்தும் எழுந்தும் பலதைக் கற்றிடும்
அழகின் அருவியாய் அனுதினம் பாய்ந்திடும்
உறவின் பிடிக்குள் உருளும் கரங்களால்
மகிழ்வின் மலர்வில் மாயாஜாலமாய்
இரவும் பகலில் இணையும் ஊஞ்சலாய்
படிப்படி மாற்றத்தில் எத்தனை தேடல்
பலரின் கூட்டில் வாழ்வின் விடியல்
போராட்டம் சுமக்கும் புதியவை கற்கும்
பாடம் பள்ளி நட்பு நடிப்பு துறைகள் பலவாய் துன்பம் சிலவாய்
விரையும் கணத்தில் விந்தை உலகில்
அவலப்பிடிக்குள் அவனியில் ஓட்டம்
எனக்கா உனக்கா இயந்திர மாற்றம்
எண்ணிப் பார்க்கையில் எத்தனை மாயம்
நிழலாய்ஆடுதேநினைவுகள்ஆயிரம்வாழ்வாய் நீளுமேவாழ்ந்தஞாபகம்!நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading