தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(105) 8/06/23
எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே
**********************************
பொதிகை மலைத் தென்றலிலே
பூத்தெழுந்த தமிழே
‘அ’ எழுத்தை வித்தாக்கி
தொகுத்தெடுத்த எழுத்துக்கள்

செந்தமிழ் சொற்றொடராய்
பாரெங்கும் பரவி வரும் தமிழ் மொழி
புலம் பெயர் சிறார்களால்
ஒத்திசையாய் இணைந்திருந்தே

பாமுகத்தில் தொடர்ந்து வர
எட்டுத்திக்கும் தமிழ்மணம்
கொட்டும் முரசொலியாய்
புவியெங்கும் முழங்கிடுதே

ஊக்கமாய் ஆக்கங்கள்
தேக்கம் காணா பிரளயமாய்
ஊற்றெடுத்து பெருகிடவே
சுதந்திர தமிழ் மணமெங்கும் கமழ்ந்திடுதே

அழிவில்லை யென்றும்
தாய் மொழியாம் தமிழுக்கே
அடுத்த தலைமுறைக்கும்
வளர்த்து வரும் பாமுகம்
வாழ்க வாழ்க என்றும் வாழவே,,!!!!!!
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading