புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
நேவிஸ் பிலிப்
கவி இல(118) 18/01/24)
பொங்கும் உளமே. தங்கிடு தையே,,,,!!!!!!!
வாராய் தைமகளே,,,வாராய் !,,,,
ஏங்கிடும் ஏழையர்க்கு நல்வாழ்வு தாராய்
கழியும் மார்கழியில் கவலைகள் கழிய
பொங்கி எழும் உளங்களிலே
தங்கிடுவாய் தை மகளே!,,,
வண்ணப் பட்டாடை கட்டி
பொன் வண்ணக் கிண்ணத்திலே
பால்சோறு பொங்க
வெடியும் வேடிக்கையுமாய்
கொண்டாடும் மாந்தரும்
தை பிறந்தால் வழி பிறக்குமென
நம்பிக் காத்திருக்கும் இன்னும் பலர்
இருக்க இடமில்லை ,படுக்கப் பாயில்லை
பொங்கியுண்ண அடுப்புமில்லை
குமுறும் உள்ளமும் பொங்கி வழியும்
கண்ணீருமாய் ,ஒரு பிடி அரிசியின்றி
தினமும் உப்பு நீரில் ஆடுது
வெறும் கஞ்சிக் கலயங்கள்,
எங்கும் கயமை ஊற்று பொங்குது
கடமைகள் எல்லாம் மங்குது
சுய நலம் எங்கும் பெருகுது
பொது நலம் எங்கோ ஓடி மறையுது
வாராய் தை மகளே வாராய் !,!
புவியில் மாற்றங்கள் தாராய்.
அன்பெனும் மென் காற்றில்
நல்லாட்சி மலர்ந்திடணும்
நீதி செழித்திடணும்
இன்பம் பொங்கும் உளமதிலே
நாளும் தங்கிடு தைமகளே!,,,,,
அன்புடன் நன்றி வணக்கம்.
