மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன்
இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி
ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி
இளையோர்கள் நோக்கிய புரட்சி
எழுத்தாளர் மாதமாய் எழுச்சி
இருபத்தியொராண்டு புலம்பெயர் தமிழ்ச்சிறுவர் எழுத்தாளர் மாதம்
ஏற்றமுறு எண்ணத்தின் கதவு
இலக்கிலே பல்துறைசார்ந்த பதிவு

காணொளிகள் கணகற்று நிரம்பி
படைப்போடு உருவாக்கம் உலகாளும் நிரம்பி
தொகுப்போடு நேயர்களின் இணைப்பு
தொடர்கின்ற வளர்ச்சியின் கூடம்
ஈடிணையற்றதே வானொலியின் சரிதம்
இலக்கிலே பாமுகமாய் பரிணமித்த இமயம்
மாலை எப்.எம்மாய் ஒலிக்கிறதே உலகெங்கும் -இன்றும்
தம்வாழ்வே மொழிக்கான முதன்மை
காற்றலையின் குடும்பத்தார் அர்ப்பணத்து பெருமை
தலைசாய்த்துப் போற்றிடுவோம்
பதியமிடும் எழுத்தாணி மகுடம்
பாரெங்கும் உங்கள் பணி மகிமை!
பாமுகத்து நேயர்குழாம் வாழ்த்து
நனிமிகு நன்றியே விருது.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

Continue reading