கணப்பொழுதில்
கணப்பொழுதில்
பவானி மூர்த்தி
நினைத்தாலே இனிக்கும் பள்ளிப் பருவம்
பள்ளிப் பருவம்
நினைத்தால் இனிக்கும்/
பாச மழையில் அன்னை
இருப்பாள்/
துள்ளி ஒடி மகிழும்
பருவம்/
துன்பம் அறியாப் பள்ளிப்
பருவம்/
அள்ளி அணைத்தே அமுதும்
ஊட்டி/
அகிலம் தன்னை வெல்லச்
சொல்லி/
உள்ளம் எங்கும் உவகை
கொண்டே/
உலகை ஆளும் உணர்வின்
பருவம்/
நினைத்தால் இனிக்கும்
பள்ளிப் பருவம்/
நித்தம் இன்பம் தந்த
பருவம்/
எனையும் ஈர்த்த இனிமைக்
காலம்/
என்றும் இனிக்கும்
மகிழ்வின் காலம்/
புனையும் கவியில்
கன்னல் சுவையே/
புவியில் இன்பம்
இன்பம் தானே/
முனைந்த வாழ்வின்
முழுதும் இன்பம்/
முற்றும் முயற்சி
அழகின் பருவம்/
இன்பம் தந்த இனிய
பருவம்/
ஈட்டும் இணையும் இல்லாப்
பருவம்/
துன்பம் இல்லாத் தூய
பருவம்/
துடிக்கும் மனதில் தூது
செல்லும்/
வன்மம் இல்லா வளமைப்
பருவம்/
வாழ்வில் நினைக்க
இனிக்கும் பருவம்/
கன்னல் சுவையை
அளிக்கும் பருவம்/
காலம் போற்றும்
பள்ளிப் பருவம்/
மெல்ல மெல்ல மோகம்
கொள்ளும்/
மெதுவாய் நெஞ்சில்
நிலைக்கும் அழகாய்/
நல்ல பெண்ணாய்
பள்ளிச் சென்று/
நன்றாய் பாடம்
படித்த பருவம்/
வல்ல கல்வி வகையாய்
நாளும்/
வருத்தம் நீங்க கற்ற
பருவம்/
சொல்ல சொல்ல
இனிக்கும் பருவம்/
சொல்லில் அடங்காச்
சொக்கும் பருவம்/
சொல்லில் அடங்கா
சொக்கும் பருவம்/
இனிய வணக்கம் வாணி
அன்பான நன்றியுடனும் வாழ்த்துக்கள்
