பாலதேவகஜன்

நேரம்

காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்.

ஏன் இந்த நிலை எனக்கு
உன் கருவில் நான்
தரித்திட்ட நேரம் தவறா?
இல்லை நான் பிறந்திட்ட
நேரம் தவறா?
என் சரியில்லா நேரம்தான்
உந்தன் உயிரை பிரிய வைத்ததுவோ?

நேர்த்தியோடு எனை வளர்த தாயே!
பூர்த்தியான வாழ்வுக்குள்
நான் நுழையும் தறுவாய்
நீ! தவறிப்போனதினால்
என் வாழ்வு பூச்சியமானது.

ஒருத்தி உனை பிரிந்ததினால்
வருத்தி போட்டது வாழ்வு
கால ஓட்டத்திலும் கலையாத
உன் பிரிவின் வலி
என் காலம் உள்ளவரை
என்னை கலங்க வைத்திடுமே

எனக்கான நேரம்
எப்போதுதான் பிறக்குமோ!
அப்போது ஆனந்தம்
என்னில் நிலைக்குமோ!
தப்பாத உன் நினைப்பு
அந்த ஆனந்தத்தை
தள்ளித்தான் வைக்குமோ!

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading