புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
பால தேவகஜன்
சதி வலைக்குள்
எம் இனம்!
சகித்திட முடியாத
இவன் மனம்!
சத்திய வேள்விக்கு
தன்னை ஆகுதியாக்க
தயாராகி நின்றான்
புலிவீரன் பார்த்தீபன்!
நல்லூரான் வீதியில்
ஊரெழு பிள்ளை!
உண்ணா நோன்பென்ற
உன்னத தியாகத்தை
உணர்வோடு தொடர்ந்தான்.
பன்னிரு நாட்கள்
நீரின்றி உணவின்றி
பெருகிய வலியோடு
போராடி மடியும்வரை
நல்லூரான் நல்லருளும்
மருகியே போனது.
அமைதிப் படையாகவந்த
இந்திய இராணுவம்
செய்ததோ பாதகம்.
அகிம்சை தேசமென்று
தன்னை அடையாளப்படுத்தும்
இந்திய தேசம்
எம்மிடம் போட்டதோ
பெரும் வேஷம்.
கோரிக்கை ஐந்தோடு
அறப்போர் தொடுத்தவன்.
வேடிக்கை பார்த்தோரை
வியப்பில் ஆழ்த்தியவன்.
தியாகமென்றால் இதுவென்று
தியாகத்துக்கே சொன்னவன்.
விழி மூடிய தருணம்
நல்லூர் வீதியெங்கும்
கண்ணீரால் தோய்தே கிடந்தது.
ஊரெழுவில் பிறந்த
ஈழத்தின் சொத்திவன்.
மருத்துவத்துறை மணாவனாய்
மலர்ந்திருக்க வேண்டியவன்
மகாத்மாவையே ஓரம்கட்டி
தியாகத்தில் உச்சம் பெற்றான்.
பார்த்தீபா! நீ!
வேண்டிய விடுதலை
ஈழத்தில் இன்னும்
தீராமல்தான் இருக்கின்றது
ஆனால் நீ! செய்த தியாகம்
அதை அழியாது காக்கின்றது.
மக்கள் புரட்சி வெடிக்கட்டும்!
சுதந்திர தமிழீழம் மலரட்டும்!
என்ற உணர்வுமிக்க வரிக்காக
உனது உயிரையே தந்தவா!
உனது தியாகம்!
உனது கனவு!
உனது இலட்சியம்!
என்றோ ஓர்நாள் பலிக்கும்
அன்றே ஈழமும் மலரும்.
