பூக்களின் புது வசந்தம்

இயற்கையின் படையல்
செயற்கையில் உன்னதம்….
வியப்பினில் விழிகள்அகல
பூக்களில் மொய்க்கும் மனங்களே….
புதுப்புது வசந்தம் பூரிப்பில்
உச்சம்…
பூக்கும் அழகு வீசும் வாசம்
காக்கும் கடவுள் எழுதிய விதி…
இறைவனின் சுயதேவையும் பூக்களே…
பூவையர் நாடலும் பூக்களே…..
இன்றைய விடியலில் அழகோடுமலர்ந்து…
மலர்ந்த நொடியில் காலனாக மாறும் மனிதமே……
விரல்களால் நுள்ளி எடுத்து
புதுவசந்தம் அழிக்கும் செயல் தகுமா…..பூக்கும் கணங்கள் அழியாத விதியை எழுத வேண்டியதை இறைவன்
மறந்தாரோ….
ரசிக்கும் மனங்கள் வசிக்கும் காலம்வரை….அழகும் வாசமும் அழியும் விதியே….பூக்களின் புது வசந்தம் சொல்லில் மட்டுமே…
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_209 "பணி" செய்யும் தொழிலை செவ்வன செய் சேதாரம் ஊதாரம் சேவையுடன் செய்! கண்ணும் கருத்துமாய் கண்ணியமாய்...

Continue reading

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading