புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
பூக்களின் புது வசந்தம்
வியாழன் கவி 1960…!
பூக்களின் புது வசந்தம்
நான் பூமியில் நடக்கவில்லை
அப்படியே மிதக்கிறேன்
எங்கே பூக்கள் என் பாதம்
பட்டு மிதிபட்டுவிடுமே
என்றெண்ணி வரமொன்று
கேட்கிறேன் இறக்கை தா
எனக்கும் வேண்டும் இரு
இறக்கைகள் தருவாயா…
காணும் இடமெங்கும்
காட்சியாய் விரியும் பூக்களை
கட்டி அணைத்து முத்தம்
இட்டே மகிழ வேண்டும்
வருடிக் கொடுத்து தாயாய்
ஒட்டியே உறவாட வேண்டும்
பாக்கள் புனைய வேண்டும்
பாடிக் களிக்க வேண்டும்
பத்திரமாய்க் காக்க வேண்டும்
மழைத்துளிகள் அடித்துக்
கவர்ந்து போகாமல்
வெம்மை சுட்டெரித்து விடாமல்
வண்டினங்கள் மெல்லுடல்
துழைத்து வலி கொடுக்காமல்
ஆம் என் விழிவலைக்குள்
விழுங்கிக் கொள்ளவா
பூக்களை அள்ளிக் கொள்ளவா
புன்னகை பூத்துக்கொள்ளவா
நான் மெல்லப் பித்தனாகிறேன்
அப்பப்போ முத்தம் இட்டு
வைக்கிறேன் முனகிறேன்
பூக்களோடு பேசிக்கொள்கிறேன்
ஏன் ஏன் ஏன்??? இது
பூக்களின்
புது
வசந்தம் அல்லவா?
சிவதர்சனி இராகவன்
10/4/2024
