அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 226
13/06/2023 செவ்வாய்
“மணி”
———
தன்னைத் தானே அடிக்கும்!
தகவல் தரவும் துடிக்கும்!
உன்னைத் துயில் எழுப்பும்!
உலகை விழிப்பில் ஆழ்த்தும்!

காலை மாலை எதற்கும்,
கவலை இல்லை அதற்கும்!
வேலை தொடங்கு தற்கும்!
வேளை வரும்போ தடிக்கும்!

காளை கழுத்தில் குலுங்கும்!
கவர்ந்து மனதை இழுக்கும்!
நாளைத் தொடக்கி வைக்கும்!
நகரும் நேரம் துலக்கும்!

நெல்லுக் கதிருள் வாழும்!
நேரம் வரும்போ(து) முதிரும்!
அல்லும் பகலும் அசையும்!
அதனால் பார்வை தெரியும்!

அணியாய் திரண்டால் மின்னும்!
அழகாய்ச் சேலையில் ஒளிரும்!
துணியின் விலையைக் கூட்டும்!
துவைக்கும் வேலை தவிர்க்கும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading