தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 164
01/03/2022 செவ்வாய்
“என்னாள் தானென்றாள்!”
அந்நாள் என் வாழ்வில்
-அரியவோர் பொன்னாள்!
அன்றுதான் முதன்முதல்
-என்வீடு வந்தாள்
என்னாள் தானெனச்
-எழிலாகச் சொன்னாள்
“எமக்குள் இடைவெளி
-இனியேது என்றாள்!”

கண்ணால் தூரக்கதை
-சொன்ன கன்னியவள்
காதில் கதைசொல்ல
-என்னருகே வந்தாள்
மண்ணிலும் பொன்னிலும்
-சுகமேது என்றாள்
மனைவியாய் வாழ்வதே
-மேலான தென்றாள்!

உற்றவள் நானின்று
-உம்மருகே இருக்க
உமது கவலையெலாம்
-உருகிவிடும் என்றாள்
கற்றவளாய் என்னைக்
-காமுறவும் வைத்தாள்
காணாத இன்பத்தால்
-களிப்படைய வைத்தாள்!

என்னவள் ஈந்தாள்
-எமக்கிரு செல்வங்கள்
என்துணையாய் எதிலும்
-அவளே இருப்பாள்
அன்னவள் அருகிருக்க
-ஏதுகுறை அவனியில்
ஆண்டவன் அருளுண்டு
-எங்களுக்கு பூமியில்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading