22
Mar
கவிதையே தெரியுமா
காதலின்பம் கவிதையே கனியும்
காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே
கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே
நிற்பதம்...
20
Mar
வரமானதோ வயோதிபம்
நகுலா சிவநாதன் 1801
வரமானதோ வயோதிபம்
வளமான வாழ்வில் வந்திடும் வயோதிபம்
வரமாக ஏற்றகணும் தந்திடும் பருவமிதை
இயற்கையின்...
20
Mar
வரமானதோ வயோதிபம் 53
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-03-2025
வரமானதோ வயோதிபம்
வாழ்வு தந்த அனுபவம்
அமைதியின் மொத்த சொரூபம்
அறிவின் ஞான...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 170
12/04/2022 செவ்வாய்
“அல்லாடும் எம் அரும் நாடு”
———————————
அழகு மிகுந்த நம் நாடு
அன்பால் இணைந்த ஒர் கூடு
பழகு தமிழும் சிங்களமும்
பாங்குடன் உலவிய நல் வீடு!
அரசியல் புகுந்து விளையாடி
ஆணவம் மிகவும் தலைக்கேறி
உரசல் களையே உண்டாக்கி
உள்ளங்களை மாற்றி கல்லாகி!
உணர்வுகள் எல்லை மீறியதால்
உயிர்கள் போயின ஆயிரமாய்
கனவுகள் யாவும் கருகியதால்
கழிந்தது காலம் கண்ணீரில்!
“தாமே” என்ற நினைப்பதனால்
தப்புக் கணக்கும்போட்டதனால்
நாடே இன்று நடுத் தெருவில்
நாயாய் அலையுது நம்முன்னால்!
விளக்கு ஏற்றவும் நெய்யில்லை
விடிந்தால் சமைக்க வாயு இல்லை
தலைக்கு மேலே கடன் தொல்லை
தாண்டி விட்டதே தன் எல்லை!
வயிற்றில் இன்று விழுகுதடி
வாயும் அதனால் திறக்கிறதடி
கயிற்றில் நடக்கும் காலமடி
காலம் கனிந்தால் நல்லதடி!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
22
Mar
வஜிதா முஹம்மட்்
வான் பூமி மாற்றவில்லை
...
22
Mar
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்_184
"மாற்றம்"
மாற்றம் காண
ஏற்றம் கண்டு
மாறுவது பண்பு
மாறாதது வீம்பு!
நம்மை...
21
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
25-03-2025
மாற்றம் மனிதனுக்கு சிறப்பு
மாறா மனிதனே தவிப்பு
தோல்வியில் வருவது பருதவிப்பு
வெற்றியில் உணர்வது...