கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 207
24/01/2023 செவ்வாய்
“யோசி”
………..
சித்திரை நிலவு சிரித்தன்ன
அத்தனை அழகு அமைந்தென்ன
நித்திரை விட்டு நிமிர்ந்தன்ன- ஓர்
முத்திரை பதிக்கும் முகபாவம்!

வித்தகம் ஏதும் குறைவில்லை
விந்தைகள் செய்யத் தடையில்லை
சத்தியம் தவறி நடப்பதில்லை-ஏன்
சந்ததம் மனதில் அமைதியில்லை?

எத்திசை நோக்கினும் எதிர்ப்பில்லை
எவரும் எதிர்த்திட வாய்ப்பில்லை
குத்திடும் வார்த்தை ஏதுமில்லை-ஏன்
குலவிப் பழகிட முனைவதில்லை?

நித்திலம் மீதினில் நிஜமில்லை
நிறைவாய் வாழ்வு அமைவதில்லை
புத்திமான் பலவான் பேதமில்லை-ஏன்
பேதமை கண்டும் கொதிப்பதில்லை?
நன்றி
மதிமகன்
(புலத்திலிருந்து)

Nada Mohan
Author: Nada Mohan