புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம் 185
16/08/2022 செவ்வாய்
விருப்புத் தலைப்பு
“நீயா நானா”
(ஓர் சுவையான விவாதம்)
நாட்டிலே நவரச நாயகன் நானே!
நயனம் நானின்றிக் கலைரசம் ஏதே!
நற்சுவை நாயகன் நானிலத்தில் நானே!
நல்லதை நாளும் சொல்வதும் நானே!

நறுமணம் என்றால் சொல்பவன் நானே!
நாற்றமும் கண்டு சொல்வேன் நானே!
நல்ல சேதியைக் கேட்பவனும் நானே!
நலமற்ற சிலவற்றை கேட்பதும் நானே!

தொட்டுத் தெரிந்திடும் தூயவன் நானே!
தொலைவில் இருப்பதை எடுப்பதும் நானே!
கெட்டதைக் காணாது மறைப்பவன் நானே!
கேட்பது பிழையானால் பொத்துவது நானே!

கத்தும் குணத்தையும் தடுப்பவன் நானே!
கண்டது முகராமல் காப்பவன் நானே!
நித்தம் உமக்கெல்லாம் துணையே நானே!
நிம்மதியாய் கொஞ்சம் இருக்கலாம் தானே!

மண்டை ஓட்டிற்குள் மறைந்து இருப்பவரும்,
மாசிலா நெஞ்சுக் கூட்டிற்குள் அடிப்பவரும்,
சண்டை ஏதுமின்றிச் சரிவர செய்கிறார்-நீரும்,
சண்டையை நிறுத்தும்: சமத்துவம் பேணும்!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan