இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு ?? ??

ரஜனி அன்ரன் (B.A) இறைக்கும் பணத்தினால் விழிக்குமா உலகு? 03.09.2026 தனிமனித மாற்றமே உலகமாற்றம் தனித்தனி...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

ராணி சம்பந்தர் பணம் என்றால் பிணமும் வாய் பிளந்தே திறக்குமே திறக்கும் பை நிரம்பினால் நினைவிலும் கனவிலுமே பல நன்றிகள்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

விருப்பு

உள்ளத்தில் தோன்றும்
உணர்வே விருப்பு
உயர்த்தும் தாழ்த்தும்
அடிக்கடி உதித்து

கனவிலும் நினைவிலும்
உலவும் கால்பதித்து
மனதையும் உருக்கும்
முயலென நெருக்கி

கதைபல வீசும்
களமதில் குதித்து
எதையெனச் சொல்வேன்
இங்கு எடுத்து

புத்தரின் விருப்பினாலே
பூத்தது ஞானம்
பூண்டது அதனால்
பூமியும் புதுக்கோலம்
சித்தரும் கொண்டார்
சிந்தையால் சிவத்தியானம்
சித்திகளைப் பெருக்கிச்
சிந்தியது சிவயோகம்

கர்த்தரின் விருப்பே
கழற்றியது தீதை
காட்சியும் ஆனது
கண்களுக்குச் சிலுவை
மீளவும் நிகழ்ந்தது
அவரின் எழுகை

எத்தரின் ஆசையோ
எறிந்திடும் மாசை
சுத்தமும் போகும்
சுகமும் சாகும்

சீதை, இராமன்
கொண்ட விருப்பால்
மிதிலை கண்டது வில் வெடிப்பு
இராவணன் ஆசையாலேயே
வெடித்தது ராம நெஞ்சு
துடித்தாள் சீதைக்குஞ்சு
தாவினான் அனுமன்
தழுவியது தீ

சீதையின் விருப்பினாலே
திண்டது அவளைத் தீ
பாதையிட்டது இராம நீதி
பழுக்கொடுத்தது பாமரச் சதி

கம்பனின் விருப்பினாலே
கண்டோம் காவியம்

மீனவன் விருப்பாலேயே
மிதந்தோடும் படகு
அகப்படா விருப்பால்
அலைந்தோடும் மீனும்
அகப்படின் அதுவும் அல்லாடிச் சாகும்
அடுத்தவர் ஆசைக்காய்
அடுப்பினிலே வேகும்.

மனோகரி ஜெகதீஸ்வரன்
பதியவில்லை

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading