சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

கலவரம்

ஆணவக் கேடு அறிவுத் தீட்டு
ஆகாக் கூட்டு அண்டி அடக்கின்
அங்கு தோன்றும் கலவரம்

அருளைச் சிந்தா அக்கிரம நிலவரம்
இருளைப் பூட்டி
இயக்க மழிபின்
கருக்கொண்டு கருவ
றுக்கும் கலவரம்
மருக்கண்டு மருண்டோடி
மறைந்தோடும் சுகவரம்

தீண்டும் துயரை தடுக்க
தாண்டு வகையறி யாநிலை
நீண்டு செல்லின் நிமிடமும்
மனது காணும் கலவரம்

பிறந்த காதல்
பிறழ்வு காணில்
பிறக்குமங்கு கலவரம்
குளறு மனமும் குழம்பியே உலாவரும்

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan