தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

நடிப்பு

நிகரில்லா நிகழ்கலையே நடிப்பு
நிகழ்த்துவோமே நாமுமதைப் பிடித்து
அகத்தினிலே காட்டுமது கூத்து
அசத்தியேநம் அனைவரையும் ஏய்த்து
புகழையுமே பூட்டுமது புகுந்து
பூணுவேடம் கலைக்காயே சூடின்
இகழ்வுதனை இரட்டிப்பாய் கூட்டும்
இக்கட்டைப் பிறருக்கு காட்டின்

அம்பலத்தே காட்டுகின்ற நடிப்பு
அருட்டிடுமே நவரசங்கள் தூவி
கும்பிட்டே காண்பவரும் நயப்பர்
குதித்துமோதிக் குதூகலமாய்க் கூவி
நம்பியவர் கக்குகின்ற நடிப்பு
இருட்டாக்கும் அறிவுதனைச் சீவி
தெம்பிழந்து வீழ்ந்திடுவார் சுருண்டு
நம்பியவரும் துயர்தனையே காவி

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading