முடிவா, விடிவா-74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025

அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட முடியா
கருப்பொருள் சாட்சி இதனால்

இருளின் போர்வை விலக
இமைக்கும் காலை பொழுது
காலம் கடந்த சோகம்
கழன்று போகும் மனது

முடிவென்று எதுவுமில்லை.
முயன்றால் விடிவும் படரும்
முயற்சிகள் பலமுறை தோற்று
முடிவிலா பயணமும் தொடரும்..

அலைகடல் போன்ற வாழ்வில்
அமைதியும் சீற்றமும் எம்மில்
நம்பிக்கை படகில் I பயணிக்க
எம் தேசக் கனவில் விடிவுடன் முடிவும்.

Jeba Sri
Author: Jeba Sri

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

Continue reading