மொழியும் கவியும்….

சர்வேஸ்வரி.க

சுழலும் பூமியில் சுற்றும் வழியில்….
நிழலும் கவி சொல்லும் மொழியாலே….
அவனியில் பவனிவர அணியாக திரளும் மொழியே……
ஆக்கிவைத்த அத்தனையிலும் எண்ணற்ற
பிரவாகம்….
துளிர்த்த அடையாளம் துரத்தும் காலத்தால்
மாற்றிடமுடியா மகுடமே….
தளம் தந்து களம் இறக்கிய
நற்பணி நானிலத்தில்…..
காலமுள்ளவரை அன்னைமொழியால் …
தமிழ்மொழியால் ……
கவிகோர்த்து பாமுகத்தில்
அலங்கரித்த சரிதம் காலத்தால் அழியாத பொக்கிஷமானதே….
மொழியும் கவியும் தேசத்தின் ஆலாபனை
அடையாளமே….

நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading