அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ புழுதி வாரி எழும் மண்வாசம் ”…கவி..ரஜனி அன்ரன் (B.A) 16.02.2023

புழுதி வாசம் வீசுது புள்ள
பொழுதும் விடிஞ்சு போச்சு புள்ள
வயற்காடு போக வேணும்
வாடி புள்ள சேர்ந்து போவம் !

தூக்கம் கண்ணைத் தழுவுது மாமா
தூறல் கொஞ்சம் நிற்கட்டும்
துள்ளிக் குதித்து வாறேன் நானும்
தள்ளிக் கொஞ்சம் நில்லு மாமா !

செக்கலுக்க போனாப் புள்ள
சீக்கிரமாய் நாத்தும் நட்டு
பாத்திக்கும் தான் தண்ணி விட்டு
பகலுக்க வந்திடலாம் பரிசமும் போட்டிடலாம் !

முறுக்குமீசை கொண்ட மாமா
சுறுக்காக நானும் வாறன்
நறுக்கான கதைகள் பேசி
வயற்காடு போவம் மாமா !

வயற்காடு கலகலக்க
வாய்க்கால் தண்ணி சலசலக்க
சிட்டுக்கள் நாம் சிறகடித்து
சேர்ந்து போவம் வாடி புள்ளே !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading