புத்தாண்டே வா -56
இன்னமும் மாறவில்லை
ரஜனி அன்ரன்
“ காற்றோடு எம்வாழ்வு “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 15.06.2023
மனித இயக்கத்தின் மூலாதாரம்
வாயுக்களின் இயக்கம் காற்று
காற்றோடு கலந்தது எம்மூச்சு
காற்றின்றி ஒருநொடி கூட வாழ்வில்லை
காற்றின் அவசியம் கருதி
காற்றலை ஆணையம் யூன் 15ம் நாளை
உலக காற்றலை தினமாக்கியதே !
சுற்றுகின்ற பூமி தனைச்
சுற்றிச் சுற்றி வருகிறது காற்று
தென்றலாய் வருடி தெம்மாங்கு பாடி
வாடையாய் வீசி கொண்டலாய் சுழன்று
மூச்சோடு நாம் வாழ முனைப்போடு செயற்பட
ஊற்றாகி நிற்கிறதே காற்று
உயிர்வாழ வளியின்றி வேறு வழிதான் ஏது ?
மெல்ல வருடினால் தென்றல்
புயலாய் வீசினால் அரக்கி
சூறாவளியாய் சுழன்றடித்தால் ராட்சசி
சுவாசமாய் நின்று நேசமாய் உறவாடி
தேசமெல்லாம் சுற்றி வாசம் வீசிடும் காற்றே
நீயே எம் உயிர்மூச்சு நீயே எம் வாழ்வு
நீயின்றி நாமில்லை நீயின்றி எதுவுமில்லையே
எம் வாசல் தேடிவரும் காற்றே வாழ்வின் உயிர் நீதானே !
