மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ரஜனி அன்ரன்

“பள்ளிக்காலம்” …. கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.10.2023

பள்ளிக்காலம் பசுமைக் காலம்
பசுமை நிறைந்த உலாக்காலம்
பட்டாம் பூச்சியெனப் பறந்து
வட்டமிட்ட வனப்புக்காலம்
கற்பனையில் மிதந்த கனாக்காலம்
பெற்றவர் கனவை நனவாக்கிய காலம்
என் வாழ்வின் வசந்தகாலம் !

திறமைக்கு களம் தந்த கூடம்
திறவுகோலான மாடம்
கவலையே இல்லாத காலம்
சிலநொடிகள் மனக்கசப்பு
சின்னச் சின்ன சண்டைகள்
அடுத்தநொடி இணைந்தபடி
போட்டிகளில் கலந்தபடி
போட்டி போட்டுப் படித்திடுவோம் !

பள்ளிக்காலம் படிப்பு ஒருபக்கம்
விளையாட்டுப் போட்டிகள் மறுபக்கமென
மறக்க முடியாத நினைவுகள்
மனதை வருடும் நிகழ்வுகளென
பன்னிரெண்டு ஆண்டுகள் எனைச் சுமந்தபள்ளி
பணியோடு பாடம் கற்றுத்தந்த ஆசான்கள்
வாழ்வின் பொக்கிஷமான வசந்தகாலமே !

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading