ரஜனி அன்ரன்

“. எல்லையில்லாக் கல்வி “…கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.01.2023

அறிவுக்கண்ணின் திறவுகோல்
அகிலத்தை மாற்றும் ஆயுதம் கல்வி
கல்விக்கென ஒரு தினத்தைக் கணித்து
கல்வி கற்க தடையான
ஆப்கான் பெண்களுக்கு அர்ப்பணமாக்கி
அனைத்துலக கல்வி தினமாக
அறிவித்து மகிழ்கிறது ஐ.நா மன்றும்
ஜனவரி இருபத்தி நான்காம் நாளை !

கரைகாண முடியாத கல்விக்கடலை
கள்வராலும் கொள்ளையிட முடியாத செல்வத்தை
எல்லைகளற்ற பரந்த அதிசயத்தை
மனித இனத்தின் பொதுஉடமையை
மகத்துவம் மிக்க அறிவுரிமையை
மறுப்பதும் அதைப் பழிப்பதும்
மானிடர்க்கு இழிவே !

ஆளுமையோடு கால்த்தடம் பதிக்க
அடி நாதமாவது கல்வி
அடிப்படைக் கல்வி பறிப்பு
கல்வியில் குழந்தைகள் பாதிப்பு
பெண்களுக்கு கல்வி மறுப்பென
தொடர்கிறது இன்றும் கல்வியுரிமை மறுப்புக்கள்
கரம்கொடுப்போம் கல்வியறிவினை மேம்படுத்த !

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading