சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.11.23
கவி இலக்கம்-293
தீயினும் எரியாத தீபங்களே

துரோக வாழ்வில் நாதியற்ற
தமிழனுக்கு நீதி ஏது ஏது ?
தமிழனாய்ப் பிறந்ததின்
ஆணவ அக்கிரம அநீதி அது

மண்ணில் எழும் வினாவுக்கு
இன்றுவரை எந்த பதிலும்
இல்லாது வெறும் ஏதிலியாய்த்
திரிந்துதான் மீதி மீதி

கண்ணில் பட்டதை விண் தவிர
பாம்பு தின்னி சிங்கி சொங்க்கு
விற்றுத் தின்னும் பாதகரைக்
குடைந்தெடுத்து குழி தோண்டிட

தலைகீழாகப் போகும் தமிழன்
வாழ்வு நஞ்சுப் போதைக்கு
அடிமையாய் மிஞ்சிடும்
குஞ்சுச் சிறாராய்க் காக்க

மழைத்துளியில் முளைத்த
காளான் போல் ஒரு நொடியில்
துள்ளி எழுந்து வந்திடுவீர்
தீயினும் எரியா தீபங்களே .

Nada Mohan
Author: Nada Mohan