மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

08.02.2024
ஆக்கம் 302
புழுகு வெடி

கொத்துக் கொத்தாய்ப் பூத்துக்
குலுங்கும் பூங்கொத்து வெடி
பத்துப் பத்தாய்ப் பறந்து பறந்து
வித்தை காட்டும் சீன வெடியோ

பத்து பத்து நூறாய் வெடிக்க
இருக்கும் பற்றும் இருந்த இடம்
இல்லாது அற்றுத் தோற்றிடும்
பீரங்கி புழுகு வெடிகளே

காசு கொடுக்காது காற்றில்
மாசு படாது மூசி மூசி நாசி
துடிக்க வெடிக்கும் பம்மாத்து
வாய் அடிக்கும் வெடி

இதயம் படபடக்க இல்லாத
பொல்லாத கதைகள் பல
சொல்ல கையும், காலும் ,
வாலும் முளைத்து வெடிக்கும்
சுக்கல் வெடியான புழுகு
வெடியே .

Nada Mohan
Author: Nada Mohan