அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

அறிவின் விருட்சம்

ஜெயம் தங்கராஜா அறிவுக்கு இதுவொரு விருந்து அறியாமையை நீக்கிடும் அருமருந்து புத்தியை எட்டவைக்கும் பெட்டகம் வாழ்க்கைக்கு கிடைத்த பொக்கிஷம் வாசித்தால்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.02.24
கவி இலக்கம் -303
காற்றின் வழி மொழியாகி
வாழ்வு தந்தாய்

வேற்று நாட்டில் மற்றவர்
துணையின்றி வாழ்பவர்
அவர்கட்கு ஒரு ஆறுதல்

வாடிய நோயால் வீட்டில்
முடைந்தவர்க்கு மிகவும்
நல்ல உற்றார் போல்
உரையாடல்

திகதி பார்த்துத் தீரா
வலியில் வாடுபவர்க்கு
உற்றுக் கேட்க இனிமை
ஆக்கம் நண்பன் போல்

அகதியாக தஞ்சம் புகுந்து
ஆதரவற்றோர்க்கு அருகில்
அமர்ந்து அரவணைக்கும்
உறவுகள் நண்பி போல

இரவு பகல் புரியாது ,நேரம்
போவது தெரியாது கற்கும்
இனிமை நிகழ்வு காற்றின்
வழி மொழியாகி வாழ்வு
தந்தாய் வறண்டு போன
இதயங்களிற்கு .

Nada Mohan
Author: Nada Mohan