ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.05.23
கவியாக்கம் -269
அன்னையர் தினம்

ஆண்டு தோறும் இனிமையான
அன்னையர் தினம் வைகாசி 14
இல் வந்திடுமே

ஒரு கருவைப் பத்து மாதம்
தன் விருப்புகள் வெறுத்து
அவ்வப்போது வரும் துன்பம்
தாங்கிச் சுமப்பவள் அன்னையே

அன்பு, பாசம்,பரவு,இரக்கம்,
அரவணைப்பில் தன்னை
நிறைத்தவளும் அவளே

எந்தப் பிள்ளையும் நன்றாய்
வருவது அந்த அன்னை
வளர்த்த முறைதானே

எந்த உறுப்புக்கு என்ன வேலை
தெரிந்தே படைத்த இறைவன்
படைப்பில் உலகை ஆளுபவள்
அன்னைக்கு அன்னையே

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading