மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

ராணி சம்பந்தர்

15.10.24
ஆக்கம் 162
பெருச்சாளி

அருவருப்பு ஆரவாரம்
இன்றி நறு நறுவெனக்
கடித்துக் குதறியதை
உருக்குலைத்துத் தான்
பெருத்துக் கொழுத்திடுமே

நிறமாறும் பச்சோந்தி
கருவறுப்பது தனியே பேரினவாதி அன்றி
தமிழ் அரசியல் ஊரினவாதியே
பழுத்த காய்கள்
பேரெடுக்கத் தன்
ஊரவனைப் பழுதாக்கி
உழுத்து அழித்திடுமே

உதிரும் தமிழரசுக்கட்சி
தன் ஊமைப் பசிக்கு
தான் நிலைத்து நிற்க
தமிழ் தேசியம் எனும்
உணர்வை முழுதாய்
உண்டு விழுங்கிடும்
பெருச்சாளிகளே.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading