தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

ராணி சம்பந்தர்

28.03.2023
ஆக்கம் 96
நீர்க்குமிழி

விண்ணில் இருந்து
மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு
வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி

கண்ணில் பட்டதும்
காணாமல் கரைந்து போனதே

பள்ளிச் சிறுவர் ஊதிய சவர்க்கார நுரையில்
பெருத்த நீர்க்குமிழி
பொத்தென வெடித்துக்
காற்றோடு கலந்து
பறந்து போனதே

நினைவுகள் சுமந்த
கனவோடு காலை மாலை அலுப்பின்றி
வேலை செய்த விவசாயியில் பூத்த
வியர்வை எனும் நீர்க்குமிழி ஒரு
நொடிப்பொழுதில்
மறைந்து போனதே

நிரந்தரமற்ற நீண்ட
வாழ்வும் கூட பரந்த
உலகில் பிறந்த மனிதனில் நீர்க்குமிழி
போல் மண்ணில்
மறைந்து புதைந்து
போகுமே

Nada Mohan
Author: Nada Mohan