09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
வசந்தா ஜெகதீசன்
மொழியெனும் வேரே முகவரியின் பதிவே…
குமரியிலே பூத்த மொழி
குவலயத்தில் மூத்தமொழி
தாய்மொழியாய் தளிர்த்த மொழி
தமிழெனவே படர்ந்தெழுந்து
தரணியிலே நிமிர்ந்த மொழி
வீரத்தின் வரலாறும் வேட்கையின் வாகையும்
தொன்மையின் புலமையிலும்
தொப்பிள் கொடியாகி தொடர்சொந்தம் உறவாகும்
தாய்மொழியே தமிழ்மொழி
காப்பியத்தின் பதிவேடாய்
காலங்களின் முச்சங்கம்
மூத்த மொழி ஆதாரம்
முதல் இலக்கணமாய்
தொல்காப்பியமும்
வரலாற்றை வகுத்துதெழுதும்
வாகை மொழி தமிழாகும்
எட்டுத்தொகை பத்துப்பாட்டு
பதினென்கீழ்கணக்கு நூலாகி
வரலாற்றை சான்றாக்கும்
வண்ணமொழி நிமிர்வாகும்
பலமொழிக்கு தாய்மொழியாய்
செந்தமிழாய் சீராகி
செதுக்கும் புலமையிலே
உலகாளும் உயர்மொழியாய்
வீறு கொள் தாய்மொழியே
வேராகி விழுதான வெற்றியின் வாகை நீ
முகவரியின் முதன்மை நீயே!
நன்றி மிக்க நன்றி
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...