தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

பணம்….
பணமே உலகாய்ப் பிரகாசம்
பற்பல செயல்களின் உருவாக்கம்
அற்புதச் செயல்கள் நிகழ்வாகும்
அர்த்தமற்றும் செலவாகும்
உழைப்பின் கணிப்பில் ஊதியம்
உறவின் கணிப்பில் பலவேடம்
வறுமை விலத்தப் போராடும்
வருமானமாகி வாழ்வமைக்கும்
உயர்வு தாழ்வு நிர்ணயம்
நாணயம் பக்கம் இருகூறு
நம் வாழ்வில் அதுவே நிஜக்கூறு
பாடாய் படுத்தும் செயல்களுண்டு
பயன்கள் பலவும் பகிர்தலுண்டு
சீராய் பேணின் சிறப்புண்டு
சேமித்து வாழ்தல் பயனுண்டு
பணமே உலகின் முதலாளி
நாளும் எமது உறவாளி
இல்லையேல் எதுவும் நிகழாது
ஏற்றம் இறக்கம் இயல்பேது.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan