வசந்தா ஜெகதீசன்

விடுதலையின் விதைப்பில்...

காலத்தின் தோகை
காசினியின் வேட்கை
ஞாலத்தில் நயம்படும்
நம்பிக்கை வேராகும்

ஆட்சியின் நிமிர்வு
ஆதிக்கப் பகிர்வு
நலிந்திட்ட பொழுது
நமக்கான கனவு

ரணங்களே கணமாய்
வலிகளே வதையாய்
சுவாசமே அனலாய்
சுவடுகள் சுடுமே

விடுதலை வேட்கையில்
வெற்றியின் நிஜத்திலே
எத்தனை விதைப்புக்கள்
எண்ணற்ற இழப்புக்கள்

கல்லறைக் காவியர்
கனவுகள் மெய்ப்பட
காசினி வசப்பட
கணதிகள் குன்றுமே

விடுதலை விதைப்புக்கள்
விடியலின் வேர்களாய்
விதைபட்டுயருமே
வேட்கையில் வெல்லுமே
நன்றி மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading