அறிவின் விருட்சமே..

வசந்தா ஜெகதீசன்... அறிவின் விருட்சமே... அறிவூட்டும் வித்தகமே அனுதினமும் புத்தகமே வரலாற்றுப் பொக்கிசமே வார்ப்பாகும் நூல்த்தேட்டம் சரிதத்தின் சான்றுரைக்கும் சமகால படைப்பாகும் எண்ணத்தின் சிந்தைகளை ஏற்றமுற...

Continue reading

அறிவின் விருட்சம்

ராணி சம்பந்தர் விதையின் விருட்சம் என்றும் வாழ்வின் வெளிச்சம் இன்றும் பாதையின் உச்சம் புத்தகமே பூத்ததே மனதிலோ இனிமை சேர்த்ததே...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

மாற்றத்தின் திறவுகோல்…
ஆண்டாய் ஒன்று அவதாரம்
அவனிக்கே புது வரவாகும்
கணிப்பும் கணக்கும் உறவாடும்
கடிகார முட்களின் அதிகாரம்

மாற்றத்தின் வலுவே தேட்டமாகும்
மனிதத்தின் மூளை திறமையாகும்
உயர்வின் விழுமியம் உலகாகும்
ஓயாத வாழ்வே ஒளிர்வாகும்

எத்தனமற்ற எழுதுகோலாய்
ஏளனமற்ற மனித வாழ்வாய்
நுட்பத்தின் வலுவே புரட்சியேடாய்
நோயற்று வாழ்தல் திறவுகோலாய்

மாற்றத்தின் மனதே கதவைத்திற
மறுபடி உலகு நிமிர்வைத் தொட
வெற்றியின் நகர்வில் வீறுதொடு
ஈராறு திங்களின் இலக்கின் குறி
இமயத்தின் வெற்றியும் ஆண்டின் வழி
இலக்கோடு நகர்வோம் இயல்பின் படி.!

மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan