வரமானதோ வயோதிபம் 53
” வரமானதோ வயோதிபம் “
வசந்தா ஜெகதீசன்
நிழலாடும் நினைவுகள்….
யாழ் நகர மத்தியிலே நடுநாயகமாய்
நல்விருட்சத் தோப்பான நூலகமே
நள்ளிரவில் தீக்கிரையாய் தீர்த்தழித்தார்
ஓயாத எழுதுகோல்கள் உறங்கவில்லை
தீப்பிழம்பாய் கொழுந்து விட்டார்
கொந்தளித்தார்
வரலாற்று சாசனங்கள் வகைவகையாய்
வற்றாத சுரங்கமென மீளமைத்தார்
சுட்டெரித்த பெட்டகத்தின் வரலாறு
பட்டுத்தந்த பட்டறிவின் உத்வேகம்
பற்பலதாய் கட்டமைப்பின் மொழித்தாகம்
பாடுகள் பலகூறின் மாளாது
வீரியமாய் இன்றுள்ள நூலகத்தில்
விதைப்பிட்டு நிலைபேண ஒன்றிப்போமே
இது போல இலண்டன் தமிழ் வானொலியும்
வரலாற்று வாகையிலே வெள்ளிவிழா
அறிவூட்டல் ஆற்றலின் மிளிர்வோடு
அனுதினமும் உருவாக்கப் பெட்டகமாய்
வழிகாட்டும் புதுப்பாதை ஐரோப்பாவில்
நிதமான பணிக்குள்ளே நிறைந்த சுடர்
நித்தமுமே இளையவர்கள் படைப்பின்
படர்
நினைவிலே நிழலாடும் பற்பலதாய்
நீங்காத தேட்டங்கள் பிரசுரமாய்
நிறைந்துள்ள அட்சயபாத்திரங்கள்.
நன்றி
மிக்கநன்றி
யூன் 10 வெள்ளிவிழா விற்கு வாழ்த்துக்கள்.
