12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
வசந்தா ஜெகதீசன்
மீளெழும் காலம்….
வரட்சி நீக்கிடும் மழை நீரே
பாறை பிளந்த விவசாயி
பாரின் பசி போக்கிய உபகாரி
நானில வாழ்வில் மழை நீரே
நாற்திசை வளத்தின் செழிப்போடு
நற்பயிர் வளரும் வனப்போடு
மீளெழும் நாட்டின் பெரும்பேறு
தாயக வாழ்வின் தளர்ச்சியில்
தள்ளாடும் உறவுகள் மீட்சியில்
அமைதியின் உறக்கம் திண்டாடும்
அவரவர் மனதில் போராட்டம்
அகலுமா அவலத்தின் பிடிமானம்
மீளுமா மறுபடி மிடுக்கோடு
எத்தனை அளவீடு எமக்குள்ளே
ஏற்றத்தின் இறக்கத்தின் கணக்கிலே
பார்த்தவை விலகும் பரஸ்பரமாய்
பாதைகள் திறக்கும் தினம்தினமாய்
செதுக்கிடும் வயலில் செழிப்பு விதை
செம்மைக்கு உரமாய் மொழியை வளர்
செழிக்கும் உறவே தனித்தோப்பு
சிறக்கும் வாழ்வின் பெரும்காப்பு
நாளைய தலைமுறை நல்நாற்று
மீளெழும் வாழ்வே முன்னேற்றம்
மிளிர்ந்திட உழைப்பதே நம்நாற்று.
நன்றி

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...