தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

தேடியவிழிக்குள் தேங்கியவலி….
காலத்தின் தோகை இருள்மூட
காணாமல் போனோர் வலிகூட
வதைபடும் உறவுகள் வலி ரணமே
வருவார் என்றிடும் உளம் கணம்

போரிடர் தந்த பேரிடர்
இரண்டாயிரம் நாளின் வலித்தொடர்
நலிந்து நலிந்து நூலாகி
நாள்பட்ட காயத்தின் ரணமாகி
உயிரின்றி ஊசலாடுகிறார்
உருக்குலைந்தே வாழ்வினை போக்குகிறார்

எத்தனை விம்பங்கள் எதிரொலியாய்
எதிர்ப்படும் முகங்கள் தம்முறவாய்
ஏங்கும் வாழ்வினைத் தாங்குவது
இடர்படும் நாட்கள் முள்ளாகி
எரிக்கும் உள்ளத்தின் அறைகூவல்
கேட்கும் எந்தன் தாய்நிலமே
கேள்விக்கு பதில் கூறாயோ
வாழ்விற்கு வழி செப்பாயோ

தேடியவிழி வலிக்கிறதே
தேசம்முழுதாய் துளைக்கிறதே
யாரென அறிவாய் நானிலமே
நாளையும் இதுவின்றி வாழவிடு
எங்கே தொலைத்தாய் எம்முறவை
வருவார் என்றிடும் வலி தணிய
வழியது தருமா வருங்காலம்.
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading