வசந்தா ஜெகதீசன்

நீர்க்குமிழி…
சுறுசுறுப்பாய் தேனீக்கள்
சுற்றிப் பறந்து வலுவாக்கும்
சிறுகச் சிறுகச் சேமித்து
சேர்ந்து ஒரு கூடமைக்கும்
சொட்டும் தேன் துளியிலே
ஒட்டும் நாவில் சுவைததும்பும்
வட்டமிட்டு பறந்த தேனீ
வண்ண மிகு சேமிப்பு
எட்டும் முன்னே மனிதர்கள்
எட்டிச் சுவைக்க பறித்திடுவர்
நீர்க்குமிழி அழகு போல்
நிமிடப் பொழுதில்
கலைந்திடும்
நிஜத்தை எட்டும் முன்னரே
நிர்க்கதியாய் தகர்ந்திடும்
அழகு வாழ்வில் கனவுகள்
ஆயிரமாய் கோட்டைகள்
நீர்க்குமிழி போலவே
நிஜமற்ற முகவரி!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan