தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

வளர்ந்த குழந்தைகள் தாமே…
பருவ எழில் வனப்பில்
பாதைகளின் சரிவில்
பயணிக்கும் மாற்றம்
பயன் நிறைக்கும் ஏற்றம்
படிப்படியாய் முனைந்து
அகத்தின் ஆற்றல் புனைந்து
துணிந்து எழத் தூணாய்
தாங்கும் அகம் தரும்
தன்னம்பிக்கைப் பலமே!
முடியுமென முனைய
அர்ப்பணங்கள் பலதை
ஆக்கி நிற்கும் பலரின்
சேவைநலம் பெரிதே!
செயல்த் திறன்கள் அரிதே!
நாளும் அவர் வாழ தவப்பொழுதும் தானமென
தாங்கும் வரம் உயர்வே!
தாங்கும் வரம் உயர்வே!
சினமதனை சிதைத்து சிரிப்பின் வலு நிறைத்து
வளர்க்கும் விதம் நிறைவே!
உளமதனை உரமாய் உயர்நிலை காண அனுதினமும்
அவர்கள் அம்புலியாய் ஒளிர
மனக்கதவை மாளிகையாய்
திறந்திருக்கும் மனிதநேயநிலை உலகே!
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading