சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

வசந்தா ஜெகதீசன்

நடிப்பு..
வேடங்கள் பலதாய்
வேடதாரிகள் உருவாய்
பாத்திரம் ஏற்குமே
பற்பல நடிப்பு

இயலிசை நாடகம்
கூத்துக்கள் பலதாய்
வரலாற்றுச் சான்றினை
வகைப்பட உரைக்குமே
நாடக நடிப்பு

அகமும் புறமும்
ஆட்படு திறனும்
வாழ்வியல் நடிப்பில்
வேடமாய் தரிப்போர்
போலியின் உறவில்
புன்னகை மிளிரும்
ஆழக் குழியில்
அவலமே நிறையும்

நடிப்பின் கூறுகள்
நன்மையும் தீமையும்
நானில வளத்தில்
நம்பிக்கை ஏடுகள்
முகமூடி அற்ற மனிதமே
வேண்டும்
நடிப்பிலும் நல்லதே
வேர்விடல் வேண்டும் .
நன்றி
மிக்க நன்றி

Nada Mohan
Author: Nada Mohan