தினம்தினமாய்….

வசந்தா ஜெகதீசன் தினம்தினமாய்---- உழைப்பின் வேரே செழிப்புறும் உருளும் நாளின் காத்திடம் அகிலப்பரிதி விழிப்புறும் ஒற்றுமைச் செதுக்கல் ஒங்கிடும் வற்றாச்சுரங்க வரம்பிலே வலிந்து...

Continue reading

மே தினமே மேதினியில் (712)

செல்வி நித்தியானந்தன் மே தினமே மேதினியில் மேதினியில் மெல்லவே வந்திடுவாய் மேஒன்றாய் கடந்து சென்றிடுவாய் மேலோர் கீழோர்...

Continue reading

வலியதோ முதுமை..

வியாழன் கவி 1954…!

வலியதோ முதுமை..!

வலியதோ முதுமை
அன்றில் மெலியதோ தனிமை
இமயமாய் வாழ்ந்த இதயங்கள்
இன்றோ இயல்பிழந்த இயக்கங்கள்
விதியென நோகிறார் வீதியில்
கடனென வாழ்கிறார்…!

ஆளுமையோடு பயணித்த இவர்
அந்தோ வயோதிபம் மடியில்
உணராத மக்களோ மெல்ல
உதறியே செல்கிறார்
சாறு பிழிந்த கரும்புச் சக்கை
குப்பையில் வீசுதல் போல்
பயன் பெற்ற பின்னர் பாதகம்
செய்திடல் தகுமோ பாரீர்…।

வலியதோ முதுமை அன்றி
வழி யறியாததோ இன் நிலை
மாற்றத்தைக் காணுவீர் அன்றி
மாறும் உம் நிலை நாளை
பொக்கிசங்கள் போலும்
காத்திடும் அதுவே கடமை…
சிவதர்சனி இராகவன்
28/3/2024

Nada Mohan
Author: Nada Mohan