“வேரைத் தாங்கும் விழுதுகள்”

நேவிஸ் பிலிப் கவ இல(554)

விதையில்இருந்து வளரும்
மரத்தின் வேரினைத்தாங்கி
தன் வினைப் பயனை ஆற்றிட
விளைந்து வருவது விழுதகள்

விண் நோக்கிச் செல்லும்
திறமை இருந்தும் தன்னைத்
தாங்கிய மண்ணோக்கிச் செல்லும்
கடமை கொண்ட விழுதுகள்

அகழ்வாரைத் தாங்கும் நிலமாய்
இல்லாது போயினும்
தன்னை உருவாக்கிய
மரத்தைத் தாங்கும் விழுதுகள்

மேலிருந்து கீழ்நோக்கி வரும்
ஆசீர் வாதமென
மரத்திற்கோர் பலமென
விளைந்து வரு்ம் விழுதுகளும்

மரம் சில விழுதுகளை இழந்தாலும்
அப்பணிதனைப் பங்கிட
பலநூறு விழுகள்
பக்க பலமாய்உயிர்த்திடுமே
நன்றி…………

Author:

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading