அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-228
விருப்புத் தலைப்பு !

“கரும்புலி “
தாயக நாட்டிற்கும்
தன்இன பிறப்பிற்கும்
தானமாய் உயிர்ஈந்த
தன்னலமற்ற உடன்பிறப்பே !

தீயகொடுமை தனை
தீயிட்டுக் கொழுத்திட
தீரா வேட்கை கொண்ட
தியாகச் செம்மலே !
காயம் கை காலன்று
கருகிய உடலாகக்
கருமருந்துக் குழிக்குள்ளே
கரைந்த உயிர்களே !

தூய மனத்தினில்
துளிர்விட்ட நாட்டுப்பற்றில்
துணிந்து போர்க்களம் ஏகிப்
பொருதித்
துடித்து மரணமே !

கானகத் தோட்டத்தில்
கரும்புலிக் கூட்டங்கள்
காணும் இடமெங்கும்
கன்னிமானாய் ஓடிடும் !

ஊனதை உண்டிட
ஒடியே ஒருகூட்டம்
ஊடுருவி வந்தங்கே
உயிர் குடித்துச் செல்லுமே !

வீணது உடலங்கு
விடுதலைப் புலியாகி
வாழ்வது நிலையாது
வாடிப் பொசுங்கியதே !

மானமுள்ள மறத்தமிழன்
மண்ணிற்காய் உயிரீந்து
மக்களுக்காய் உடலீந்து
மரணித்துப் போனானே !

கரும்புலி கால்சுவடு
காணாமல் போனாலும்
கனவோடு விதைத்தது
கருவாகி முளைக்குமே !

இரும்பு நம்பிக்கை
இதயத்தில் மலருதே
இனிக்குது கரும்பாக
இக்கணத்தினுள் தமிழாகி

உருண்டு உடலில்லை
உயிருண்டு உறுப்பில்லை
உணர்வுகள் துடிக்குதே
உயிர்தந்த நாட்டுக்காய்

இருந்தாலும் ஆயிரம்பொன்
இறந்தாலும் ஆயிரம்பெண்
இதயத்தில் கரும்புலிகள்
இறுதிவரை வாழ்ந்திடுமே !

அபிராமி கவிதாசன்
11.07.2023

Nada Mohan
Author: Nada Mohan