அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-261.
தலைப்பு!

பெருமை
……….
தனக்கென வாழா
பிறர்க்கென வாழ்வதே பெருமை!

சமுதாயத் தொண்டில்
தன்னை ஈடுபடுத்தி
மக்கள் நலன் கருதி
உழைப்பதே பெருமை!

இனத்தின் விடுதலை
எண்ணிக் களத்தில்
நிற்பதே
பெருமையிலும் பெருமை!

அன்னை தெரசா போல்
மனித நேயத்தில்
மனத்தைச் செலுத்தி
மாசற்ற மாதராய்
உழைப்பதே மாபெரும் பெருமை!

தன் மகனைச்
சான்றோர் அவையில்
அமர்த்தப் பாடுபடுவதே ஓர் ஒப்பற்ற தாயின் பெருமை!

தமிழீழ விடுதலையைப் படைத்துத் தற்சார்பு
நாடாண்டதே எங்கள்
தேசியத் தலைவரின்
பெருமை!

அடிப்படை மாற்றம்
அரசியல் மாற்றம்
களமாடும் எங்கள்
சிற்றப்பாவின் நாம் தமிழர் அரசியலே
உலகு போற்றும் பெருமை!

தனித்து வாழும் பெண்ணின்
துணிவே
பெருமை!

காலத்தை வெல்லும்
கவிதை புனைவதே
கவிஞர்க்குப் பெருமை!

ஏழை எளிய
ஒருவர்க்கு உதவுதல்
ஒப்பிலாப் பெருமை!

சந்தம் சிந்தும்
சந்திப்பில் கவிஎழுதுவதே
எனக்கும் – என்
தமிழுக்கும் பெருமை!

சுற்றுச்சூழல் காப்பதே
மானிடர்க்குப் பெருமை!

-அபிராமி கவிதாசன்
16.04.2024

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading