அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

அபிராமி கவிதாசன்.

21.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -215
தலைப்பு !
“விடியல்”
விடியல் பொழுதே வருக வருக
விண்ணில் ஒளிகொண்டு
விளக்காய் வருக //

பட்சிகள் நாதம் தருக தருக
பலவண்ண குரலில் பாடல் தருக //

மாசற்ற காற்றில்
சிலுசிலு தென்றல்
மனதைத் தொட்டு மகிழ்வாய் செல்க //

நிலமகள் குளிர நீரும் தெளித்து
நித்தம் முற்றத்தில் கோலம் வரைக//

வைகறை மலர்கள் வாசம் வீசிட
மோகம் கொண்டு வண்டுகள் சேர்க //

நிலைப்பெண் மெல்ல மேற்கில் மறைய
நித்தில பரிதி கிழக்கில் மலர்க /

நனிமிகு நன்றிகள்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading