நட்பென்றாலே

நட்பென்றாலே உள்ளத்தில் கள்ளமின்றி உயர்ந்ததோர் எண்ணங்கொண்டு எள்ளிநகை ஆடாமல் ஏற்றமான பண்புகொண்டு ஏற்றத்திலும் இறக்கத்திலும் மாற்றமில்லாத நிலைகொண்டு உயிர்காக்கும்...

Continue reading

நட்பென்றாலே

ராணி சம்பந்தர் பரிதவிக்கும் நேரம் புரிந்துணர்வுடனே கை கொடுப்பாரே உறங்க மறுத்த விழியை ஊக்கமிட்டு உரமூட்டித் தாகந் தீர்க்கும் தோழரே நடமாடும் மனிதர்...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-284. தலைப்பு!

சலவை
……….
மூளைச் சலவை செய்வார் நாட்டில் – அரசியல்
மோசடி ஆட்கள் எல்லாம்
ஓர்படை வீட்டில்!

எத்தனை காலம் ஏமாற்றுவார் மக்களை – அட
அரசியல் வாதிகள் சொல்வார் பொய்களை!

கோவேறு கழுதைகள் என்றும்
குத்திரைகள் ஆகுமா? – ஒரு
கூத்தாடிக் கூட்டத்தால் இந்த
நாடே விடியமா?

கூட்டத்தை வைத்தே நாட்டில்
எடைபோ டாதே – ஒரு
கொள்கை அற்ற கூட்டம்
நிலை கொள்ளாதே!

மாவீரர் கனவை நீ
நனவாக்க மறந்தாயா? – விடுதலை
மறவரை
எண்ணாமல் உயிர் துறந்தாயா?

மாவீரர் கனவையே மறவாது
நனவாக ஆக்கு – ஈழம்
கட்டாயம் மலர நீ
எப்பொழுதும் நோக்கு!

ஈழம் மலராது பல்லோர்
செய்வார் சலவை – அவர்கள்
துண்டாடப் பார்ப்பார்
எம்மக்கள் உறவை!

கார்த்திகைத் திங்கள் புதிதாய்
மலருது பாரடா! – நம்
கவலைகள் எல்லாம் தீரும்
நல்ல நாளடா!

அனுரா அரசியல் அழகாய்
நடக்குது பாரடா! – இனி
அனைத்திலும் நன்மை பிறக்கும் பாரடா!

குழப்படிக் கூட்டம் நடுங்கும் தருணம் இதுவடா – மக்கள்
கூட்டம் ஒன்றாய்க் கூடி
வாழட்டும் இனியடா!

மூளைச் சலவை இங்கே கைக்கூலிகள் தானடா – அந்த
முழு மூடர்கள் நம்மை ஏய்த்திடுவார் பாரடா!

விழிப்புணர் வோடு நீ
இருந்திடப் பழகு! – ஈழ
விடுதலை ஒன்று மட்டுமே நமக்கு அழகு!

ஆசிரியர்:அபிராமி கவிதாசன்.
29.10.2024

Nada Mohan
Author: Nada Mohan