இதுவும் கண் துடைப்பாயிடுமா ?

ராணி சம்பந்தர்

எழுத்துக்களை எழுதிடப் பேனா
எத்தனித்து ஏங்குகிறது
எழுத முடியாமல் கைகள் ஏனோ
நழுவி வீங்குகிறது

நாட்டில் நடக்கும் நடப்புகளோ
கோட்டில் ஏறி இறங்குகிறது
கூட்டில் அடைபட்டும் படாமலும்
பெரும் புள்ளிகள் காட்டிக்
கொடுப்பவரைச் சுட்டிப்
பொசுக்கிறது

அப்பா ,பிள்ளை ,சகோதரர் ,
கூட்டாளிகள் கூடிச் சேர்ந்த
தலைகளின் மர்மம் நசுங்கிப்
பதுங்குகிறது

கண்ணில் ஒத்திச் சேர்த்தது
தாய் மண்ணில் நீதியுடனே
தொங்குமா அல்லது இதுவும்
கண் துடைப்பாயிடுமா ?

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading