இயற்கை வரமே இதுவும் கொடையே

அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை உறிஞ்சி குடிக்கும் வண்டினங்கள்
ஆகாயத்தில் இரைதேட செல்லும் பறவைகள்
தென்றல் வந்து தட்ட ஆடும் மரங்கள்
மரங்களில் தொங்கும் கனிகள்
வாசனை திரவியங்கள் சேர்க்காத பூவின் நறுமணங்கள்
சலசல சத்தத்துடன் ஓடும் நதிகள்
வண்ண வண்ணமாய் தோன்றும் பூவகைகள்
கலப்பட நிறங்கள் சேர்க்காமல் கொடி வகைகள்
மழை வர முதல் பறக்கும் ஈசல்கள்
மழைத்துளி நிலத்தில் பட்டு தெறிக்க வீசும் மண்வாசனை
அபி அபிஷா

Author: