இரா.விஜயகௌரி

வித்தகத்தை உரைக்காது
சத்தியத்தை உரைத்தெழுந்தேன்……

மொழிக்குள் விழுதாகி
மொழியமிழ்துள் இழையாகி
வேரின். கணுக்களுக்குள்
உறிஞ்சி எழும் மொழியாகி
ஆற்றின் ஒழுக்காகி -நிதம்
அழகு தமிழ் சொல்லாகி
சத்தியத்தின் பாய்ச்சலிலே
சரித்திரத்தின் வடம் பிடித்தேன்

எனக்குள் ஒளியானாள்
என் விழுதின் மொழியானாள்
அவள் உணர்வின் உறவாகி-நிதம்
உதிரத்தின் பின்னலிட்டாள்
தெறிக்கும் கதிராகி -அவள்
தெவிட்டாத அமிழ்தாகி
விளக்கும் சொல்லாகி-வாழ்வு
ஒளிக்கதிரில் மின்னலிட்டாள்

செழிக்கும் பயிரினுள்ளே -அவள்
வேத்த்தின். பொருளானாள்
ஆழ்கடலின் முத்தாகி-உறவு
கடலுக்குள் நங்கூரமிட்டாள்
தேவதையாய் வருடுகிறாள்-அவள்
சத்தியத்தை உரைத்தெழுந்தாள்

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading