இரா.விஜயகௌரி

சித்திரமே நீ
சரித்திரம் தான்………….

பொட்டிட்டு பூவிட்டு
பொன் வளையல் தானிட்டு
பட்டுடுத்தி பவனி வர
சுற்றமெல்லாம் சூழ வர
பொற்சிலையாய் நடை பயிலும்
என் சித்திரமே நீ -இங்கு
காட்சிப் பொருளல்ல
கனிந்து முடங்காமல்
எழுந்து வா. சரித்திரப்பந்தலில்
உனக்கே முதலிடம் புரிந்து வா

ஆணவப் படு கொலைகள்
கருவுக்குள் கருவழிப்பு
பெண்சிசுவதைகள். பாலியல்
சித்திரவதைக். கொடுமை
இத்தனையும். பால்ய. பருவத்துள்
அடுக்கடுக்காய் கடந்தும் உனை
சீர்தனக் கொடுமைக்குள். சிதைந்து
கயமைத்தனம் புரியும் கனவான்கள் முன்
அத்தனையும். கடந்து. வா எழுந்து. வா

வித்துவத்தை. நித்தமுமாய். விதைத்து
விழிநாரின். துளியைக் கரைத்து
நிமிர்ந்த நேர் நடையில் விரைந்து. வா
சரித்திரத்தின் படையலை. நீ. படைக்க
நித்தமுமாய் வளம் படைக்கும் உன் கரத்தை
கண்டெழுந்தி. வாழ்த்தி நாம் வணங்க
சித்திரமே பொற்பதமே சரித்திரமே எழுந்து வா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading